தந்தை, மகன் உயிரிழப்பை கொலை வழக்காக பதிவு செய்யவேண்டும் - விக்ரமராஜா வலியுறுத்தல்

சாத்தான்குளம் இரட்டை கொலையை தமிழக முதல்வர் ஒரு காலகெடுவை விதித்து கொலை வழக்காக பதிவு செயப்படும் என அறிவிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

தந்தை, மகன் உயிரிழப்பை கொலை வழக்காக பதிவு செய்யவேண்டும் - விக்ரமராஜா வலியுறுத்தல்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
  • Share this:
சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் சாத்தான்குளம் இரட்டை உயிரிழப்பு போல் வேறு சம்பவம் நடைபெறாமல் இருக்க காவல்துறை நல்லிணக்கத்தோடு செயல்பட அறிவுறுத்தும் வகையில் மனிதாபிமன நினைவூட்டல் புகார் மனுவை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரண்டு பேர் மரணம் தொடர்பான வழக்கில்  உடனடியாக கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். தமிழக முதல்வர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். அதனை வரவேற்கிறோம்..


அதேபோன்று சிபிஐ விசாரணையில் பல வழக்குகள் குறிப்பாக மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஆகவே குறிப்பிட்ட காலகெடுவை விதித்து தமிழக முதலமைச்சர் கொலை வழக்காக பதிவு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டால் ஆறுதல் தரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் இந்த வழக்கை உற்று கவனித்து வருகின்றனர். எனவே இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டவேண்டும் என முதல்வரை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது.
மேலும் படிக்க...

ஆந்திராவில் மேலும் ஒரு விஷவாயு கசிவு சம்பவம் - இருவர் உயிரிழப்பு

ஒரு போலியான முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவு செய்தது நேற்று ஊடகங்களில் வெளியான சிசிடிவி காட்சியில் தெரியவருகிறது. இதனை ஒரு சாட்சியாக எடுத்துக்கொண்டு முதல்வர் உடனடியாக அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading