• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா மரணத்தைவிட பட்டினிச்சாவு கொடியது: முழு தளர்வுகள் அளிக்கப்படவேண்டும் - வணிகர் சங்கத்தலைவர் விக்ரமராஜா..

கொரோனா மரணத்தைவிட பட்டினிச்சாவு கொடியது: முழு தளர்வுகள் அளிக்கப்படவேண்டும் - வணிகர் சங்கத்தலைவர் விக்ரமராஜா..

விக்ரமராஜா

விக்ரமராஜா

கொரோனா சாவைவிட பட்டினிச்சாவு கொடியது எனவும் தமிழகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவேண்டும் என விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனா சாவைவிட பட்டினிச்சாவு கொடியது எனவும் தமிழகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவேண்டும் என விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

ஜூலை 31-ஆம் தேதியோடு தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் 8வது முறையாக மருத்துவர் நிபுணர் குழுவுடன் முதமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக கடும் இன்னல்களை சந்தித்துவிட்டதாகவும் கொரோனா சாவைவிட பட்டிச் சாவு கொடியது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விக்ரமராஜா ஊரடங்கு தீர்வாகது என்பதை தமிழக அரசு புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் உடனடியாக கடைகள் திறக்க சொன்னாலும் 40% வணிகர்கள் கடையை திறக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் 90% தேனீர் கடை உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கோயம்பேடு சந்தை திறப்பதற்கான முடிவை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர். ஊரடங்கால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் 5 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.



கொரோனாவின் தாக்கம் குறித்து மக்கள் முழுமையாக தெரிந்துகொண்டிருப்பதாகவும் 90% மக்கள் முகக்கவசங்களை அணிய தொடங்கிவிட்டதாகவும்... இனியும் இந்த பிரச்னைக்கு ஊரடங்கு தீர்வாகது என உணர்ந்து வணிகர்களுக்கு தமிழகம் முழுவதும் முழு தளர்வுகள் அறிவிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Also read... Chennai Power Cut | சென்னையில் இன்று (30-07-2020) மின்தடை எங்கெங்கே..?

கடையை திறந்திருந்தால் எந்த அதிகாரி எப்போது வருவார் என்ன அபராதாம் விதிப்பார் என்ற அச்சத்தில் வியாபாரிகள் இருப்பதாகவும். கொரோனாவால் சாவதை விட பட்டிச்சாவு கொடியது என அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: