கோயம்பேடு சந்தையை திறக்கக் கோரி அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - விக்ரமராஜா

கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு சந்தையை திறக்கக் கோரி அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - விக்ரமராஜா
விக்ரமராஜா
  • Share this:
சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக தெரிவித்தார்.

போராட்டம் அறிவித்த தேதியின் போது முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் அவர்களுடன் உடனடி ஆலோசனையில் ஈடுபட இயலாது எனவும் 12 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி காரணமாக அரசு விடுமுறை என்பதாலும் 10 ஆம் தேதி போராட்டம் அறிவித்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை பேரமைப்பு எடுத்துரைத்ததன் பேரில் கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ சங்க வியாபாரிகள் இம்முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Also read... டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விமர்சனம்


தொடர்ந்து பேசிய அவர் கோயம்பேடு சந்தையை முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறப்பது வியாபாரிகளுக்கு அவசியமான ஒன்று எனவும், திருமழிசையில் அமைத்த தற்காலிக சந்தை மழைக் காலத்தில் தாக்கு பிடிக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.மேலும், வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அரிசிக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்த அவர், அரசு அவர்கள் நலனை கருத்தில் கொண்டு விரைவாக நல்ல முடிவினை அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading