வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சரிடம் விக்கிரமராஜா கோரிக்கை

விக்கிரமராஜா

தமிழகம் முழுவதுமாக வணிகர்களுக்கு என்று தடுப்பூசிகளை முகாம்களை அமைத்து தர வேண்டும் என விக்ரமராஜா முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

 • Share this:
  வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கொரோனா நிவாரண நிதி, 1.10 கோடி காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, நலிந்த வணிகர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் சுற்றுலாத் தளங்களில் உள்ள வணிகர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  மேலும் செருப்பு, நகை கடைகள், துணிக்கடைகள், உள்ளிட்ட அனைத்துக் கடைகளையும் விரைவில் படிப்படியாக திறக்க வேண்டும் என்றும் இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் முதலமைச்சரிடம் கூறியதாக தெரிவித்தார்.

  Must Read : மின்கட்டணம் செலுத்த இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

  வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதுமாக வணிகர்களுக்கு என்று தடுப்பூசிகளை முகாம்களை அமைத்து தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். மேலும், கலைஞர் அறிவித்த வணிகர் நல வாரியத்தை விரிவாக்கம் செய்யவும் ஜிஎஸ்டி அல்லாத வணிகர்களை சங்க பிரதிநிதிகளாக உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.
  Published by:Suresh V
  First published: