வணிக வியபாரத்திற்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தும் கட்சிக்கு வாக்கு - விக்ரமராஜா

விக்ரமராஜா

விவசாயிகளும் மீனவர்களுக்கும்  உதவுவதுபோல் வணிகர்களுக்கும்  உதவ வேண்டும்...

 • Share this:
  வணிக வியபாரத்திற்கும் நீர் வளத்திற்கும் தனி அமைச்சகம் ஏற்படுத்தும் கட்சி அடையாளம் கண்டு  தங்கள்  வியபாரிகளின் வாக்கு  வங்கி நகர்த்தப்படும் என, தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர்  விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்று பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வசதியாக மார்க்கெட் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் மொத்த காய்கறி சங்க தலைவர் ஜீ.டி.ராஜசேகர் மற்றும் வணிக சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர் .

  பின்னர் நீயூஸ் 18 தொலைக்காட்சிக்கு விக்கிரமராஜா அளித்த பேட்டியில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகளை பாதுகாக்கும் வகையிலும் தங்களுக்கு என்ன என்ன பாதிப்புகள் இருக்கிறது என்பதை  சுட்டிகாட்டி ஏறக்குறைய 21 கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் தலைவர்களிடத்தில்  ஒப்படைக்கப்பட்டது” என்றார்.

  அந்த கோரிக்கையில் வணிக நல வாரியம் என்பது தமிழகத்திலேயே 10 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. இந்த வணிக நலன்  என்பது சீரமைக்கப்பட்டு,  செயல்படுத்திட வேண்டும். அதில் திருத்தம் செய்ய வேண்டும், வணிகர் நல வாரியம் என்றால் ஜிஎஸ்டி  நம்பர் உள்ளவர்கள் மட்டுமே என இருக்கின்றது. அதை மாற்றி சிறு வணிகர்களும் அனைத்து உறுப்பினர்களும் சேர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாக்க வேண்டும்.

  சாதாரண வியாபாரிகள் மாண்டு போனாள் 5 லட்ச ரூபாய்  என்பதை   உயர்த்தி தரவேண்டும். விவசாயிகளும் மீனவர்களுக்கும்  உதவுவதுபோல் வணிகர்களுக்கும்  உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளோம். வியாபாரிகள் பொருத்தவரையில் லைசென்ஸ் முறை ஒரே ஒரு முறை யாக மாற்றி விட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம். தராசில்  முத்திரை வைப்பதை 1 ஆண்டுக்கு ஒரு  முறையாக உள்ளது அதை மாற்றி  5 ஆண்டுகளுக்கு 1  முறையாக மாற்றித் தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  வணிகர் சங்க பிரச்சினைகளுக்கான  ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க  வேண்டும், வணிக வியாபாரத்திற்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். நாங்கள்தான் 37 லட்சம் வியாபாரிகள் இருக்கிறோம். நாட்டுக்கு வருவாய் ஈட்டி தருகிறோம்.  நீர் வளத்திற்கும் வியாபாரத்திற்கும் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். அவர்கள் நேரடியாக சென்று கோரிக்கைகளை கேட்கும்பொழுது விரைவாக தீர்வு ஏற்படும்  வகையில், அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.

  வியாபாரிகள் மத்தியில் அதிகாரிகள் சட்டம் போடும் போது வணிகர் சங்க பிரதிநீதிகளை அழைத்தே வரி போட வேண்டும்.  வணிகவரி என்பது சீரமைப்பு இல்லாமல் போகிறது, உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சி கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது . மாவட்டத்திற்கு மாவட்டம் மாற்றம் இன்றி  ஒரே வாடகை  என சீரமைக்க வேண்டும்.

  Must Read :  “மார்ச் 26-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்”: விவசாயிகள் அழைப்பு

  வியாபாரி மத்தியயில்  பாதுகாப்பு சூழலை  உருவாக்க வேண்டும், கடைகளை யாராவது தாக்கினால் அவர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஏற்கக் கூடிய அரசியல் கட்சியைய்  அடையாளம் கண்டு,  தங்கள் வாக்கு வங்கிகளை நகர்த்துவதற்கு  பேரமைப்பு முடிவு செய்துள்ளது”  இவ்வாறு  விக்ரமராஜா தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: