சுடுகாட்டில் தனி இடம் கேட்டு இறந்த பட்டியலின பெண்ணின் உடலை 3 நாட்களாக எடுக்க முடியாத அவலம்
சுடுகாட்டில் தனி இடம் கேட்டு இறந்த பட்டியலின பெண்ணின் உடலை 3 நாட்களாக எடுக்க முடியாத அவலம்
நிலையான சுடுகாடு இல்லாததால் இறந்தவரின் உடலை ஏரிக் கரை, ஓடை, குளம் போன்ற இடங்களில் அடக்கம் செய்து வந்தனர். இதனால், சுடுகாடுக்கு தனி இடம் ஒதுக்கித் தர கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த பொதுமக்கள்
நிலையான சுடுகாடு இல்லாததால் இறந்தவரின் உடலை ஏரிக் கரை, ஓடை, குளம் போன்ற இடங்களில் அடக்கம் செய்து வந்தனர். இதனால், சுடுகாடுக்கு தனி இடம் ஒதுக்கித் தர கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த பொதுமக்கள்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் சுடுகாட்டுக்கு தனி இடம் ஒதுக்க கோரி, பட்டியலின மக்கள், மூன்று நாட்களாக இறந்தவரின் உடலை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி அருகே கொட்டியாம் பூண்டி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த கிராமத்தில் அவர்களுக்கு என்று நிலையான சுடுகாடு இல்லாததால் இறந்தவரின் உடலை ஏரிக் கரை, ஓடை, குளம் போன்ற இடங்களில் அடக்கம் செய்து வந்தனர். இதனால், சுடுகாடுக்கு தனி இடம் ஒதுக்கித் தர கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி சத்யநாராயணன் என்பவரின் மனைவி அமுதா உயிரிழந்தார். இதையடுத்து, 19-ம் தேதி, விழுப்புரம் கோட்டாச்சியர் தலைமையில் ஓர் இடத்தை தேர்வு செய்து, அமுதாவின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், கொட்டியாம் பூண்டி கிராமத்தில் உள்ள மாற்று சமூகத்தினர் அதை தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து, உடலை எடுக்காமல் பட்டியலின மக்கள் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் சுடுகாட்டுக்கு என நிலையான இடம் ஒதுக்கித்தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுது, உடலை எடுத்து அடக்கம் செய்யும் பணி நடைபெற்றது.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.