ரஜினிக்கு புதிதாக காவி சாயம் பூச வேண்டியதில்லை - சீமான் விமர்சனம்

விஜய் , ரஜினி

ரஜினிக்கு புதிதாக காவி சாயம் பூச வேண்டியதில்லை

 • News18
 • Last Updated :
 • Share this:
  ரஜினியின் அரசியல் வளர்ச்சிக்கு விஜய் இடையூறாக இருப்பதால், விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் நடந்து வருகிறது. ஷூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியது முதல் மாஸ்டர் களம் பரபரப்பானது.

  அதைத்தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது

  இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரித்துறை குறித்து பேசிய சீமான் ரஜினியின் அரசியல் வளர்ச்சிக்கு விஜய் இடையூறாக இருப்பதால் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாகவும், ரஜினிக்கு புதிதாக காவி சாயம் பூச வேண்டியதில்லை என்றும் விமர்சித்தார்.

  இயக்குநர் பாலுமகேந்திராவின் நினைவு தினத்தையொட்டி சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

  Also See...

   
  Published by:Sivaranjani E
  First published: