விஜயகாந்த் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்- பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்- பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக என்றும் விவசாயிகள் பக்கம் இருக்கும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

  • Share this:
2021-ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்திற்குப் பின்பு, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும், அதுவரை அதிமுக கூட்டணி தொடர்கிறது என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார். ஆண்டிபட்டியில் தேமுதிக ஒன்றிய கவுன்சிலர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், தேமுதிகவின் நிலைபாடு குறித்து பிரேமலதாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தேமுதிக ஆயத்தமாகி வருவதாகவும் விஜயகாந்த் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறினார்.

ரஜினி கட்சி தொடங்க இருப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துப பேசிய அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம் என்றார்.

தொடர்ந்து விசாயிகளின் போராட்டம் குறித்து பேசுகையில், தேமுதிக என்றும் விவசாயிகள் பக்கம் இருக்கும் என்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன், விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் கலந்திருப்பதாகவும் கருத்து தெரித்தார்.

புயல் குறித்துப் பேசுகையில், தமிழக அரசு மீது நிறை குறைகள் இரண்டுமே இருப்பதாகவும், வடிகால் வசதி சரியில்லை என்றும் சரியாக தூர்வாரப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
Published by:Suresh V
First published: