அதிமுகவினர் எதிர்ப்பை மீறி வைத்த விஜயகாந்த் பேனர் அகற்றம் - காவல்நிலையத்தில் முற்றுகையிட்ட தேமுதிக

மதுரையில் அதிமுகவின் கடும் எதிர்ப்பை மீறி வைக்கப்பட்ட விஜயகாந்த் பேனர் அகற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர் சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அதிமுகவினர் எதிர்ப்பை மீறி வைத்த விஜயகாந்த் பேனர் அகற்றம் - காவல்நிலையத்தில் முற்றுகையிட்ட தேமுதிக
அதிமுகவினர் எதிர்ப்பை மீறி வைத்த விஜயகாந்த் பேனர் அகற்றம்
  • Share this:
மதுரையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவிற்காக மாநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பேனர் வைத்தபோது  அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது தங்களது பேனர் வைக்கும் பகுதி என அதிமுகவினர் விடுத்த எதிர்ப்பை மீறி வைக்கப்பட்ட தேமுதிக பேனர்களை நேற்று இரவு சிலர் அகற்றியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சிவமுத்துக்குமார் தலைமையில் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தேமுதிகவினர் அதிமுகவின் பேனர்களை அகற்றாமல் தேமுதிக பேனர்களை மட்டும் அகற்றியது யாரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also read: சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவியுங்கள் - மத்திய அரசுக்கு எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்


அதிமுக கூட்டணியில் சுமுகமான உறவில் இருக்கும் பொழுது தங்களது பேனர்களை அகற்றி வருவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக மாவட்ட செயலாளர் சிவ முத்துக்குமார், "அதிமுக உடன் சுமுகமான கூட்டணி தொடரும் நிலையில் மதுரையின் தொடர்ந்து அதிமுகவினர் தங்களுக்கு இடையூறு செய்து வருவதாக" குற்றம்சாட்டினார்.
First published: August 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading