தலையில் தீர்த்தக்குடம் வைத்து உற்சாகமாக நடனமாடிய எம்.எல்.ஏ. (வீடியோ)

தலையில் தீர்த்தக்குடம் வைத்து உற்சாகமாக நடனமாடிய எம்.எல்.ஏ. (வீடியோ)

கே.என்.விஜயகுமார்

திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு பக்திப்பரவசத்துடன் நடமாடி வந்தார்.

 • Share this:
  திருப்பூரில் நடந்த மாகாளியம்மன் கோவில் விழாவில், எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் தலையில் தீர்த்தக்குடம் வைத்துக் கொண்டு பக்திப் பரவசத்துடன் கையில் வேப்பிலையுடன் உற்சாகமாக நடனமாடினார்.

  திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே உள்ள அவிநாசிக்கவுண்டன்பாளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா கடந்த 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

  இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து பக்திபரவசத்துடன் ஆடி வந்தனர். இதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு பக்திப்பரவசத்துடன் நடமாடி வந்தார்.  இதைத் தொடர்ந்து, கோவிலில் பக்தர்கள் உற்சாகத்துடன் தீர்த்தக்குடம் எடுத்து வந்து சாமிதரிசனம் செய்தனர். மேளதாளம், வாண வேடிக்கை என்று களைகட்டிய திருவிழாவில் எம்.எல்.ஏ. விஜயகுமார் தீர்த்தக்குடம் எடுத்து ஆடி வந்ததை அப்பகுதி பொதுமக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.
  Published by:Suresh V
  First published: