விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் - பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிளும் அமோக வரவேற்பு இருக்கிறது, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

news18
Updated: April 12, 2019, 4:22 PM IST
விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் - பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா, விஜயகாந்த்
news18
Updated: April 12, 2019, 4:22 PM IST
தேர்தல் பிரசாரத்திற்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் வருவார், அதுகுறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வரும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் சென்று உள்ளேன்.

அதிமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிளும் அமோக வரவேற்பு இருக்கிறது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். திமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக் கணிப்புகள், கருத்து கணிப்பு அல்ல, அது கருத்து திணிப்பு. விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார். அதுகுறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வரும்’ என்றார்.

இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாணியில் பிரசாரம் மேற்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘
நான் இதுற்கு முன்பும் இதே போல் தான் பிரசாரம் மேற்கொண்டேன், ஜெயலலிதா இல்லாததால் எல்லோருக்கும் புதிதாக தெரிகிறது’ என்று பதிலளித்தார்.

Also watch


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...