எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை - விஜயகாந்த் மகன் திட்டவட்டம்

எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை - விஜயகாந்த் மகன் திட்டவட்டம்

தந்தையுடன் விஜயபிரபாகரன்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்தின் மகன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

  கூட்டத்தின் முடிவில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ், “அதிமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால், கொடுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை காரணமாகவும், தமிழகம் முழுக்க இருக்கும் தொண்டர்களின் எண்ணங்களை மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திடம் தெரிவித்ததால் கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.

  இன்று தேமுதிகவினருக்கு தீபாவளி. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுக துணி ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார்.” என்று கூறினார். மேலும் தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் விரைந்து சென்றார் சுதீஷ்.

  இதையடுத்து இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற தேமுதிக செயல்வீர்ர்கள் கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், “தேமுதிக யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தலையே போனாலும் தன்மானத்தை இழக்கமாட்டோம். எனக்கு தன்னம்பிக்கை அதிகம். என் அப்பாவை சிம்மாசனத்தில் அமரவைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நான் யாருக்கும் பயப்படமாட்டேன். தேமுதிகவிற்கான நேரம் வந்துவிட்டது.

  விருத்தாசலம்,பண்ருட்டி ஆகிய சட்டமன்ற தொகுதியில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் போட்டியிட வேண்டும். சாணக்கியனாக இருந்தது போதும் இனி தேமுதிக சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது இலவசம் என்று கூறி மக்களை சோம்பேறி ஆக்கி விட்டனர். தமிழக அரசியலில் அதிமுகவுக்கு இனி இறங்குமுகம் தான். எடப்பாடி தொகுதியில் முதல்வார் பழனிசாமி தோல்வியடைவார்.” என்று ஆவேசமாக பேசினார்.

  பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய பிரபாகரனிடம் மக்கள் நீதி மய்யம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி வைக்க தயாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. அவர்கள் எங்களை விட சிறிய கட்சி. தேமுதிக மக்கள் மற்றும் தெய்வத்துடன் தான் கூட்டணி” என்றார்.

  இதனிடையே மக்கள் நீதிமய்யம் கட்சியின் துணைதலைவர் பொன்ராஜ் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: