Home /News /tamil-nadu /

அரசியலில் நேருக்கு நேராக மோதுங்கள்: குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள்: கண் கலங்கி விஜய பிரபாகரன் உருக்கம்

அரசியலில் நேருக்கு நேராக மோதுங்கள்: குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள்: கண் கலங்கி விஜய பிரபாகரன் உருக்கம்

விஜய பிரபாகர்

விஜய பிரபாகர்

அரசியலில் நேருக்கு நேராக மோதிப்பாருங்கள். குடும்பத்தைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

    தே.மு.தி.க பொதுச்செயலாளரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருகிறார். அதனால், அவரால் கட்சிப் பணியில் முழுவதுமாக ஈடுபடமுடியவில்லை. அதனால், விஜயகாந்தின் மனைவி பிரமேலதா விஜயகாந்த், அவரது விஜயகாந்த் பிரபாகரன் ஆகியோர் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். நடைபெற்றுமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    இந்தநிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவை விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நடத்திவைத்தார். அதன் பிறகு, மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது பேசிய அவர், ‘அரசியலில் நேருக்கு நேரா மோதிப்பாருங்க. ஆனா குடும்பத்த தொந்தரவு பண்ணாதிங்க. என கூறியதோடு தன் தந்தை நலமாக இருப்பதாகவும், அவரை நான் நற்காக பார்த்தக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

    யாரும் தவறாக பேசக்கூடாது என்று கூறி மேடையிலேயே கண்கலங்கி அழத் தொடங்கினார். இதனால் பேச முடியாமல் நா தழுதழுத்து நின்றார். கட்சி நிர்வாகிகள் நாங்கள் இருக்கின்றோம் என்று குரல் எழுப்பி அவரை ஆசுவாசப்படுத்தினர். அதன் பின்னர் மீண்டும் பேச்சை தொடங்கினார். கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் விஜயபிரபாகரன் கண்கலங்கிய சம்பவம் விழாவிற்கு வந்திருந்த கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Vijayakanth

    அடுத்த செய்தி