தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - வீடு திரும்பினார் விஜயகாந்த்

விஜயகாந்த்

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 • Share this:
  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாதாந்திர சிகிச்சைக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு வீடு திரும்பினார்.

  நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று மாலை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

  இந்நிலையில், வழக்கமான மாதாந்திர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.

  கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால், விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவரின் மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதிஷ், மற்றும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Must Read : எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. 10 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு

  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். அதன் பின்னர் அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: