கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், அரசு வேலை - தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், அரசு வேலை - தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

விஜயகாந்த்

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்ச ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000-யைக் கடந்துள்ளது. இந்தநிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகிறது.

  ஒருபுறம் பொதுமக்களிடம் இயல்புநிலை திரும்பினாலும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.49 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,472 ஆக அதிகரித்துள்ளது.


  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் நலன்கருதி அவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கவேண்டும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் தமிழக அரசு வேலை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: