Home /News /tamil-nadu /

விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: தொண்டர்களைச் சந்தித்து உற்சாகம்

விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: தொண்டர்களைச் சந்தித்து உற்சாகம்

விஜயகாந்த்

விஜயகாந்த்

Vijayakanth Birthday: பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 70வது பிறந்தநாளையொட்டி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவரை பார்த்தது தொண்டர்கள் மகிழ்ச்சியில் உற்சாக வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

    தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார். அவருடன் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர் .
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMDK, Vijayakanth

    அடுத்த செய்தி