கொடியேற்றி பேசிய விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!

கொடியேற்றி பேசிய விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!

விஜயகாந்த்

விரைவில் தமிழம் முழுவதிலும் உள்ள  மக்களை சந்திப்பதற்காக, விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வர இருக்கிறார் என்று பிரேமலதா கூறினார்.

 • Share this:
  தேமுதிகவின் 21-ஆம் ஆண்டு கொடிநாளை ஒட்டி, இன்று விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

  தேமுதிக கொடியை கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைத்த விஜயகாந்த், அங்கே திரண்டிருந்த தொண்டர்களிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார். ‘அனைவருக்கும் வணக்கம் என்று கூறிய விஜயகாந்த், ‘கொடி நாள் வாழ்த்துகளை’ தெரிவித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயகாந்தின் குரலைக் கேட்ட தொண்டர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.

  மேலும், ஓர் பெண் குழந்தைக்கு ‘ஜனனி’ என்று விஜயகாந்த் பெயர் சூட்டினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் உடனிருந்தார்.

  பின்னர் பேசிய பிரேமலதா, விரைவில் தமிழம் முழுவதிலும் உள்ள  மக்களை சந்திப்பதற்காக, தலைவர் அவர்கள் பிரச்சாரத்திற்கு வர இருக்கிறார் என்று கூறினார்.

  சசிகாலவை நான் சந்திக்க போகிறேன் என்ற செய்தி எனக்கே செய்தியை பார்த்துதான் தெரியும் என்றும், கூட்டணி குறித்து விஜயகாந்த் என்ன அறிவிக்கிறாரோ அதை தொண்டர்கள் ஏற்க தயாராக இருக்கின்றனர் எனவும் கூறினார்.

  தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் தேமுதிக வெற்றிபெறும், என்றும் இன்னும் எந்த கட்சியும் கூட்டணி குறித்து பேசத் துவங்கவில்லை.

   

  மேலும் படிக்க... கலப்பு திருமண தம்பதியினரின் குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் விவகாரம்: அரசாணை வெளியீடு

   

  தேர்தலுக்கு குறைந்த காலமே இருபத்தால் விரைவாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது தான் தேமுதிக கோரிக்கை” எனவும் பிரேமலதா கூறினார்.
  Published by:Suresh V
  First published: