• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இன்று தான் எங்களுக்கு தீபாவளி; அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் - சுதீஷ் பேட்டி

இன்று தான் எங்களுக்கு தீபாவளி; அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் - சுதீஷ் பேட்டி

எல்.கே சுதீஷ்

எல்.கே சுதீஷ்

அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று தேமுதிக துணைபொதுச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்

  • Share this:
    அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ், “அதிமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால், கொடுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை காரணமாகவும், தமிழகம் முழுக்க இருக்கும் தொண்டர்களின் எண்ணங்களை மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திடம் தெரிவித்ததால் கூட்டணியிலிருந்து விலகுகிறோம். இன்று தேமுதிகவினருக்கு தீபாவளி. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுக துணி ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார்.” என்று கூறினார்.

    மேலும் தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் விரைந்து சென்றார் சுதீஷ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: