ஒருவரின் நம்பிக்கையை இழிவுபடுத்துவது தவறு: கந்த சஷ்டி கவசம் படித்து வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்

ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டி தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் படித்துள்ளார்.

ஒருவரின் நம்பிக்கையை இழிவுபடுத்துவது தவறு: கந்த சஷ்டி கவசம் படித்து வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்
விஜயகாந்த்
  • Share this:
கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், வீடியோ வெளியிட்ட சுரேந்தர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்த சஷ்டி கவசம் குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் கந்த சஷ்டி விமர்சனத்துக்கு கண்டனங்களைத்தெரிவித்தனர்.

இந்தநிலையில், ஆடி மாத சஷ்டி விரதத்தை முன்னிட்டு விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படித்துள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம்.
இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன்.

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading