Home /News /tamil-nadu /

பள்ளிகள் திறப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

பள்ளிகள் திறப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

விஜயகாந்த்

விஜயகாந்த்

கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தவேண்டும் என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

    தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தே.மு.தி.கவும் வரவேற்கிறது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க நாட்டில், நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது.

    நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். எனவே, பள்ளிகள் திறப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில் ஏற்கெனவே அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ரத்து செய்திருப்பது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    தற்போது அனைத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்ட பிறகு பள்ளிகளை ஏன் திறக்க கூடாது என்ற கேள்வி எழக்கூடும் என்பதற்காகவே பிப்ரவரி 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவித்திருப்பது தேர்தலுக்காவே என எண்ணத் தோன்றுகிறது.

    கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? திமுக பயன்படுத்திய பழமொழியின் கதை தெரியுமா?



    தேர்தல் முடிந்த பின் புதிய வைரஸ் பரவி வருவதாக கூறி தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். எனவே மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொதுத் தேர்வைக் கருத்தில் கொண்டு 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: School open, Vijayakanth

    அடுத்த செய்தி