சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 1000 படுக்கை வசதி... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 1000 படுக்கை வசதி... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
அமைச்சர் விஜய பாஸ்கர் (கோப்புப்படம்)
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதால், மேலும் ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேட்டரி கார்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் ஆலோசனையும் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் தொடங்கிய கொரோனா வார்டு தற்போது ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



Also read... ஊரடங்கால் முடங்கிப் போன மாணவர்களின் கல்வி... கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படும் மாணவ, மாணவிகள்

கூடுதலாக ஆயிரம் படுக்கைகளை ஏற்பாடு செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் வகையில் கையில் டேக் பொருத்தப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading