• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டெங்கு காய்ச்சலால் 6 வயது குழந்தை உயிரிழப்பு! அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்

டெங்கு காய்ச்சலால் 6 வயது குழந்தை உயிரிழப்பு! அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆறு வயது பெண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் - கவிதா தம்பதி. அவர்களுக்கு மகாலெட்சுமி என்ற 6 வயது பெண் குழந்தையும், தினேஷ் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகாலெட்சுமி, எழும்பூரிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துவருகிறது.

இந்தநிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 கோடி மதிப்பிலான மருத்துவ படிப்பு மாணவ மாணவியர்களுக்கான புதிய விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தல், தமிழ்நாடு விபத்து மற்றும் அறுவை சிகிச்சை சேவை மையத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தல் மற்றும் கல்லூரி ஆண்டு விழாவினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ் பி வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சரோஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ‘எழும்பூரில் டெங்கு காய்ச்சலால் இறந்த குழந்தை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்தது குறித்த கேள்விக்கு உரிய பதிலளிக்காமல் மழுப்பலாக பதில் தெரிவித்தார்.

மேலும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ள அரசு மருத்துவர்கள் வெளியில் பணி செய்யக்கூடாது என்பதை போன்று தமிழகத்தில் சட்டம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு’ என்று தெரிவித்தார்.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: