டெங்கு காய்ச்சல் விவகாரம்! மக்களுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவுரை

டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை நான்காவது நாள் காய்ச்சல் இருக்காது என்றும், இதனால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு காய்ச்சல் விவகாரம்! மக்களுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவுரை
அமைச்சர் விஜய பாஸ்கர் (கோப்பு படம்)
  • News18
  • Last Updated: September 26, 2019, 9:14 PM IST
  • Share this:
காய்ச்சல் பாதிப்பு உள்ளானவர்கள் தாமதிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிகிச்சைப் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுபவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்த உடன் வீட்டில் இருக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டு இரண்டு மூன்று நாட்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை நான்காவது நாள் காய்ச்சல் இருக்காது என்றும், இதனால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


காய்ச்சல் பாதிப்பு குறித்து ஒரு நிமிடத்தில் சோதித்து தெரிந்துகொள்ளும் வகையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வசதிகள் இருப்பதாகவும், அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே இருப்பதாக கூறினார்.

Also see:

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading