அமைச்சர் காமராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது- விஜய பாஸ்கர்

அமைச்சர் காமராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது- விஜய பாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் காமராஜ் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

 • Share this:
  சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்டர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அமைச்சர் காமராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர், நேற்று இரவு மருத்துவமனையில்தான் இருந்தேன், தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணித்து வருகிறோம். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.

  சக மருத்துவர்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படுத்த நான் இன்று கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என்றும், தமிழகத்திற்கு மேலும் 1,69,920 கோவாக்சின் வர இருக்கிறது என்றும் விஜய பாஸ்கர் தெரிவித்தார். மேலும், இதுவரை 907 பேர் தான் கோவாக்சின் எடுத்து கொண்டுள்ளனர். நான் 908 வது நபர் எனவும் அவர் கூறினார்.

  தடுப்பூசியைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் அதை போட்டுக்கொள்வதில் தயக்கம் உள்ளது. அப்படி தயக்கம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் உட்பட மருத்துவ முன்னோடிகள் தடுப்பூசி போட்டுக்கொள்கிறோம் என்றார்.

  மேலும் படிக்க... கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

  சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறிய விஜயபாஸ்கர், நான், சுகாதாரத்துறை செயலாளர் என்று அனைவரும் மருத்துவர்கள் என்ற அடிப்படையிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளோம். பிற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து தடுப்பூசி போடப்படும் என்றார். மேலும், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

  சேலத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தொர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பெற்றோர்கள், சுகாதாரத்துறை என பலரின் கருத்துகளை கேட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், பள்ளி நிர்வாகம் சுகாதரத்துறை கூறும் விதிமுறைகளை மிக கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
  Published by:Suresh V
  First published: