என்னை மகனாக நினைத்துக் கொள்ளுங்கள்! சுபஸ்ரீ பெற்றோரிடம் விஜய பிரபாகரன் உருக்கம்

சுபஸ்ரீயின் பெற்றோர் ரவி மற்றும் கீதா ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்த விஜய பிரபாகரன் அவர்களிடம் உணர்ச்சி பொங்க பேசினார்.

என்னை மகனாக நினைத்துக் கொள்ளுங்கள்! சுபஸ்ரீ பெற்றோரிடம் விஜய பிரபாகரன் உருக்கம்
விஜய பிரபாகரன்
  • News18
  • Last Updated: September 22, 2019, 7:32 PM IST
  • Share this:
என்னை மகனாக நினைத்து எந்த உதவி என்றாலும் கேளுங்கள். எந்த நேரத்தில் அழைத்தாலும் உதவி செய்கிறேன் என்று பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ பெற்றோரிடம் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீயின் வீட்டிற்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் இன்று மாலை வந்து ஆறுதல் தெரிவித்தார். சுபஸ்ரீயின் பெற்றோர் ரவி மற்றும் கீதா ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்த விஜய பிரபாகரன் அவர்களிடம் உணர்ச்சி பொங்க பேசினார்.

அப்போது அவர், ‘நான் இங்கே வந்ததில் அரசியல் இல்லை. சுபஸ்ரீ இழப்பு என்னை மிகவும் பாதித்தது எனக்கு 27 வயதாகிறது. என்னை உங்கள் மகனாக நினைத்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். எந்த நேரத்திலும் செய்து தருவேன்’ என்றார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், ‘ஒரு உயிரை இழந்து சுபஸ்ரீ குடும்பம் வேதனையில் உள்ளது.
இந்த விபத்திற்கு காரணமாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Also see:
First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading