எனது தந்தையின் சமூகப் பணியையும் அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன் - நடிகர் விஜய் வசந்த்
எனது தந்தையின் சமூகப் பணியையும் அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன் - நடிகர் விஜய் வசந்த்
விஜய் வசந்த்
எனது தந்தையின் சமூகப் பணியையும் அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன் என மறைந்த கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
காந்தி பிறந்த தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மாநகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு, மறைந்த கன்னியாகுமரி, தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகனும் திரைப்பட நடிகருமான விஜய் வசந்த் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் கூறும்போது " உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தனது தந்தை இந்த தொகுதி மக்களுக்காக செய்த சமூக மற்றும் அரசியல் பணிகளை தொடர்ந்து செய்து அவரது விருப்பத்திற்கு ஏற்ப பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவேன் என்று கூறினார்.
இதனையடுத்து அவர் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு அவரது நினைவு நாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.