முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விஜய் டிவி நந்தினி காட்டில் அடை மழை.. பிரபல நடிகர் படத்தில் கமிட்!

விஜய் டிவி நந்தினி காட்டில் அடை மழை.. பிரபல நடிகர் படத்தில் கமிட்!

 மைனா நந்தினியை இன்ஸ்டாவில் 4.4 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

மைனா நந்தினியை இன்ஸ்டாவில் 4.4 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

மைனா நந்தினியை இன்ஸ்டாவில் 4.4 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

 • 1-MIN READ
 • Last Updated :

  விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை நந்தினி. தற்போது மைனா நந்தினி என்று அழைக்கும் அளவிற்கு அந்த சீரியல் அவருக்கு புகழ் பெற்று தந்தது.

  இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த மைனா, அதிலிருந்து வெளிவந்து மனம் களங்காமல் தொடர்ந்து சினிமா, ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வந்தார்.

  இதனை தொடர்ந்து சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நடிகர் யோகேஷ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா,  சன் டிவி நாயகி போன்ற சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது இந்த ஜோடிக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

  முதல்நாள் வசூலில் பாகுபலியை வீழ்த்தி 'புஷ்பா' சாதனை

  சமீபத்தில் இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இந்த ஷோவில் காதலர் தின பரிசாக யோகேஷ் மைனாவின் படத்தை நெஞ்சில் பச்சை குத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அதே போல், இவர்களின் செல்ல பிள்ளை துருவனையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வட்டாரம்  அதிகரித்தது. தற்போது மைனா நந்தினியை இன்ஸ்டாவில் 4.4 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். மேலும் இறுதிக்கட்ட நிகழ்ச்சி வரை இருவரும் சூப்பராக விளையாடி ரூ. 3,00,000 பரிசு தொகை மற்றும் சிறந்த் ஜோடி விருதையும் வென்றுள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Nandhini Myna (@myna_nandhu)  Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ள அடுத்து மைனா சீரியல்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஏற்கெனவே அவர் கமல்ஹாசன் படத்தில் கமிட்டாகியுள்ள நிலையில் இப்போது கார்த்தி நடிக்கும் விருமன் படத்திலும் கமிட்டாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள மைனா, கார்த்தியுடன் எடுத்த புகைப்படத்தையும் போஸ்ட் செய்துள்ளார்.

  ஒட்டு மொத்த சின்னத்திரை பிரபலங்களுக்கும் இவர் மீது அப்படி ஒரு மரியாதை.. யார் இந்த விஜய் டிவி பிரவீன் பென்னெட் ?

  மேலும் தனது இன்ஸ்டா பதிவில், கார்த்திக் சார்வுடன் பணியாற்ற இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும் இயக்குனர் முத்தையா சார்வுடன் பணியாற்றுவது குறித்து ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த போஸ்டை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: