அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

கடலூர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.சம்பத் தேர்தல் பிரசாரம்

கடலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.

  • Share this:
கடலூர் மஞ்சகுப்பம் மணிகுண்டு பகுதியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சீனு, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்கபட்ட விஜய் ரசிகர்கள் ஒன்றுதிரண்டு கையில் இரட்டை இலை சின்னம் பொறுத்தப்பட்ட பதாகை ஏந்தியபடி அதிமுக வேட்பபாளர் எம்.சி.சம்பத் த்திறக்கு ஆதரவு தெரிவித்து மஞ்சகுப்பம் பகுதியில் கடைவீதிகளில் வேட்பபாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

இதனைத்தொடர்த்து விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேட்டி கேட்டபோது கொடுக்க மறுத்தவிட்டனர். அதிமுக தொழில்துறை அமைச்சரும் கடலூர் அதிமுக வேட்பாளருமான எம்.சி.சம்பத் நமக்கு அளித்த பேட்டியில், “கடலூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். வெற்றி வாய்பபு அமோகமாக உள்ளது. அதேபோல் விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தினர் ஆதரவு கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ஆதரவு கொடுத்தனர்” என்றார்.

திமுக வேட்பபாளர் கடலூர் தொகுதி மக்களுக்கு சூனியம் வைத்ததாக மக்களிடம் கூறி உங்களைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவில் 8 ஆண்டு காலம் என்னுடம் அதிமுகவில் பயணித்தவர் அவர் தற்போது ஒருமையில் பேசிவருகிறார் அவருக்கு கடவுள் பதில் சொல்வார் என்று எம்.சி.சம்பத் கூறினார்.
Published by:Sheik Hanifah
First published: