முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவிப்பு

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்

2021 பிப்ரவரி 28ம்  தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • Last Updated :

தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும்,  இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அமைப்பை பதிவு செய்தார்.

தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 15வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக  எஸ் ஏ சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில், 2021 பிப்ரவரி 28ம்   தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மேலும், அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இருக்கும் வேலைவாய்ப்புகளை அழிக்கக்கூடாது: திமுகவுக்கு கமல் கோரிக்கை

top videos

    இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Sa chandrahekhar