Home /News /tamil-nadu /

மெர்சல் விஜய்யாக மாறி வேட்புமனு தாக்கலுக்கு வந்த ரசிகர்...!

மெர்சல் விஜய்யாக மாறி வேட்புமனு தாக்கலுக்கு வந்த ரசிகர்...!

மெர்சல் விஜய்யாக மாறி வேட்புமனு தாக்கலுக்கு வந்த ரசிகர்

மெர்சல் விஜய்யாக மாறி வேட்புமனு தாக்கலுக்கு வந்த ரசிகர்

மதுரை அனுப்பானடி பகுதி (வார்டு எண் - 88) பெண்கள் தனி வார்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 100 மாநகராட்சி வார்டுகள் உள்ள நிலையில் இந்த அனுப்பானடி வார்டில் மட்டுமே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒருவர் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
மதுரையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது மெர்சல் பட விஜய் தோற்றத்தில் ரசிகர் ஒருவர் சைக்கிளில் ஊர்வலமாக வந்து பிரச்சாரம் செய்தது காண்போரின் கவனத்தை ஈர்த்தது.

மதுரை அனுப்பானடி பகுதி (வார்டு எண் - 88) பெண்கள் தனி வார்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 100 மாநகராட்சி வார்டுகள் உள்ள நிலையில் இந்த அனுப்பானடி வார்டில் மட்டுமே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒருவர் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனுப்பானடி பகுதியின் மகளிரணி தலைவர் நாகேஸ்வரி என்பவர், தெற்கு மண்டலத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது விஜய் ரசிகரான குரு என்பவர் மெர்சல் படத்தில் இருந்த விஜய்யின் தோற்றத்தில் தன்னை மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்தார்.

Also read... நடிகர் விஷ்ணு விசாலின் தந்தை மீது நடிகர் சூரி அளித்த பணமோசடி வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

மேளதாளம் முழங்க சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட ரசிகர்கள் சூழ மேல அனுப்பானடி பகுதியில் இருந்து, வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள மண்டல அலுவலகம் அமைந்துள்ள முனிச்சாலை பகுதி வரை சைக்கிளில் ஊர்வலமாக வந்தார். இது அப்பகுதியில் கடந்து சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்தது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Local Body Election 2022

அடுத்த செய்தி