விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டியில் 314 ரன்களை எடுத்தும் தமிழ்நாடு அணி இமாச்சலத்திடம் தோற்று கோப்பையை நழுவ விட, இமாச்சலம் முதன் முதலாக விஜய் ஹசாரே கோப்பையை வென்று கொண்டாடியது.
முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணி தினேஷ் கார்த்திக் (116), பாபா இந்திரஜித் (80) மற்றும் கடைசியில் இறங்கி அதிரடி மன்னன் ஷாரூக்கான் 21 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 42 விளாச தமிழ்நாடு அணி 49.4 ஓவர்களில் 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, தொடர்ந்து ஆடிய இமாச்சலப் பிரதேச அணியில் ஷுபம் அரோரா அருமையாக ஆடி 136 ரன்களை அடிக்க கேப்டன் ரிஷி தவான் ஆட்டத்தின் போக்கை தன் அதிரடியில் மாற்றி 23 பந்துகளில் 42 ரன்கள் விளாச ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்ட போது 47.3 ஓவர்களில் 299/4 என்று விஜேடி முறையில் வெற்றி பெற்றது.
உண்மையில் 47.3 ஓவர்களில் 288 எடுத்தால் போதும் எனவே 11 ரன்களில் வென்று இமாச்சலம் முதல் முறையாக விஜய் ஹசாரே கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இமாச்சல அணியில் 96/3 என்ற நிலையில் சேர்ந்த ஷுபம் அரோரா, அமித் குமார் (74) ஜோடி ஸ்கோரை 244 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அதாவது 150 பந்துகளில் இருவரும் 148 ரன்கள் எடுத்தது திருப்பு முனையானது.
தமிழ் நாடு அணியும் மோசமாகத் தொடங்கியது 40/4 என்று தடுமாறியது. அப்போதுதான் பாபா இந்திரஜித், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர். விஜய் சங்கர் கேப்டனாக என்ன செய்தார் 22 ரன்களில் வெளியேறினார், ஒரு எளிதான ரன் அவுட்டை தன் மோசமான மிஸ் பீல்டிங்கல் கோட்டை விட்டார். ஜெகதீசன் கடைசியில் சத நாயகன் ஷுபம் அரோராவுக்கு எளிதான கேட்சை விட்டார். ரிஷி தவான் அடித்த தடுக்க வேண்டிய ஷாட்களை பவுண்டரிக்கு விட்டனர் தமிழ்நாடு பீல்டர்கள்.
தினேஷ் கார்த்திக் 3 சிக்சர்களுடன் தினேஷ் கார்த்திக் 67 பந்துகளில் அரைசதம் கண்டார். 53-ல் அரோரா ஒரு கேட்சையும் விட்டார் தினேஷ் கார்த்திக்கிற்கு. பாபா இந்திரஜித் 57 பந்துகளில் அரைசதம் கண்டார். தினேஷ் கார்த்திக் மீண்டும் ஆக்ரோஷம் காட்டி ஜஸ்வாலின் ஒரு ஓவரில் 6,4,6 விளாச சதம் அருகில் வந்தார். 96-ல் மீண்டும் ஒரு கேட்ச் விடப்பட்டது. கார்த்திக் 96 பந்தில் சதம் காண, இந்திரஜித் 71 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருவரும் சேர்ந்து 164 பந்துகளில் 202 ரன்கள் என்ற வலுவான கூட்டணி அமைத்தனர்.
Also Read: தென் ஆப்பிரிக்கா போட்டுக்கொடுத்த ‘தண்ட’பவுலிங்- சதமடித்த ராகுல்- இந்தியா ஆதிக்கம்
இமாச்சல் ஆக்ரோஷமாகத் தொடங்கி 8.5 ஓவர்களில் 60 ரன்கள் விளாசினர். அதன் பிறகு தமிழ்நாடு ஸ்பின்னர்கள் வர இமாச்சல விக்கெட்டுகள் விழுந்தன. அரோரா அமித் குமார் சேர்ந்து பிரமாதமாக ஆடினர், 38வது ஓவரில் இருவரும் ரன் ஓடுகிறேன் என்று ஒரே முனையில் முடிந்தனர், ஆனால் தமிழ்நாடு கேப்டன் விஜய் சங்கர் சொதப்பலான பீல்டிங்கில் எளிய ரன் அவுட் வாய்ப்பு நழுவ விடப்பட்டது. ஜகதீசன் ஒரு எளிதான கேட்சை அரோராவுக்கு விட்டார். கடைசியில் தமிழ்நாடு பீல்டிங் படுமோசம், களவியூகமும் சொல்லிக் கொள்ளுபடியில்லை, இதனையடுத்து தோல்வி தழுவி கோப்பையை இமாச்சலத்துக்கு தாரை வார்த்தது. ஆட்ட நாயகன் ஷுபம் அரோரா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.