‘மன உளைச்சலில் இருக்கிறோம்’ - முன்னாள் நிர்வாகி மீது விஜய் மக்கள் இயக்கத்தினர் போலீசில் புகார்

‘மன உளைச்சலில் இருக்கிறோம்’ - முன்னாள் நிர்வாகி மீது விஜய் மக்கள் இயக்கத்தினர் போலீசில் புகார்

விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் போலீசில் புகார்

விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களை ஜெயசீலன் பரப்பிவருவதாக கூறி, அவரை கைது செய்ய கோரி, விஜய் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஜெயசீலன், இயக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருவதாக கூறி விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவர் 2011ம் ஆண்டு இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த ஜெயசீலன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி.ஆனந்த் இயக்கத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், சாதி ரீதியாக செயல்பட்டு விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரை நீக்கிவிட்டு, சொந்த சாதியை சேர்ந்தவர்க்கு மாவட்ட தலைவர் பதவியை வழங்கியுள்ளதாக கூறி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் டிக்கெட் ரசிகர்களுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் ஜெயசீலன் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

Also read... Gold Rate: ஒரே நாளில் ரூ. 464 குறைந்தது தங்கம் விலை... மாலை நிலவரம் என்ன?

இந்த நிலையில்,பொய்யான குற்றச்சாட்டை பரப்பிவருவதால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மிக மன உளைச்சலில் இருப்பதாகவும், இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பிவரும் ஜெயசீலனை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை புனித தோமையர் மலை காவல்நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: