Home /News /tamil-nadu /

ரசிகர் மன்ற கொடியுடன் விஜய் ரசிகர்கள் சாலையில் செய்த அட்டகாசம்..

ரசிகர் மன்ற கொடியுடன் விஜய் ரசிகர்கள் சாலையில் செய்த அட்டகாசம்..

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விஜய் ரசிகர்கள் எல்லை மீறிய சம்பவமும் ஆங்காங்கே நடந்துள்ளது. 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விஜய் ரசிகர்கள் எல்லை மீறிய சம்பவமும் ஆங்காங்கே நடந்துள்ளது. 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விஜய் ரசிகர்கள் எல்லை மீறிய சம்பவமும் ஆங்காங்கே நடந்துள்ளது. 

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில்  விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்ற  கொடியும் சாலையில் போக்குவரத்து பாதிக்கும் வகையில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.  இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். இதற்காக பல இடங்களிலும் விஜய் ரசிகர்கள் விடிய விடிய குத்தாட்டம் போட்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆளுநர் தேநீர் விருந்தைப் தி.மு.க புறக்கணித்தால் டீ செலவு மிச்சம் - அண்ணாமலை விமர்சனம்

    இதுபோன்ற, அளவில்லா கொண்டாட்டத்தால் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விஜய் ரசிகர்கள் எல்லை மீறிய சம்பவமும் ஆங்காங்கே நடந்துள்ளது.



    அந்த வகையில் நாமக்கல்லில் விஜய் ரசிகர்கள் சிலர் விஜய் மக்கள் மன்ற கொடியுடன் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முன்னதாக,  அண்மையில் விஜய் மக்கள் மன்றத்தினர் பீஸ்ட் படம் வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் சாலையில் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Actor Vijay, Beast, Vijay fans

    அடுத்த செய்தி