• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விருதுநகர் மாவட்டத்துக்கு லீவ் இல்லையா? ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய விஜய் ரசிகர்

விருதுநகர் மாவட்டத்துக்கு லீவ் இல்லையா? ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய விஜய் ரசிகர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று விடுமுறை இல்லை என்று விஜய் ரசிகரின் கேள்விக்கு அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி பதிலளித்துள்ளார்.

  • Share this:
    தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று(நவம்பர் 18) தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் தமிழகத்திற்கு இன்று ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் விருதுநகர் மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.


    இந்தநிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் ட்விட்டரில் மாவட்ட ஆட்சியருக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி, ‘இல்லை... விருதுநகரில் தினமும் இரவில் மழை பெய்கிறது. காலை வெயில் அடிக்கிறது’என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: