ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாணவி சத்யாவை கொலை செய்த சதிஷையும் ரயிலில் தள்ளி தண்டிக்க வேண்டும்: விஜய் ஆண்டனி கோரிக்கை

மாணவி சத்யாவை கொலை செய்த சதிஷையும் ரயிலில் தள்ளி தண்டிக்க வேண்டும்: விஜய் ஆண்டனி கோரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாணவி சத்யாவை கொலை செய்த சதிஷை பொறுமையாக 10 வருடங்களுக்கு பிறகு தூக்கில் போடாமல் உடனே விசாரித்து ரயிலில் தள்ளி விட்டு தண்டனை  அளிக்க வேண்டும் என்றும் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ட்விட் செய்துள்ளார். 

சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யா (20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சத்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. சதீஷூம் அதே கல்லூரியில் படித்து வந்த நிலையில், நேற்று சந்தியாவிடம் பேசுவதற்காக அவரை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் திடீரென சத்யாவை அந்த வழியாக வந்த மின்சார ரயிலில் தள்ளியுள்ளார்.

இதில் மின்சார ரயிலில் மோதி பலத்த காயமடைந்த சத்யா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து பயந்துபோன சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சோஷியல் மீடியா போஸ்ட்களுக்கு கட்டுப்பாடு இல்லையா? - சமூகவலைதள நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாணவி சத்யாவின் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவியை கொலை மற்றும் அவரது தந்தையின் தற்கொலைக்கு காரணமான சதிஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவி சத்யாவின் கொலை குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Tweet, Vijay Antony