“விஜயகாந்தை சீண்டியதன் விளைவை துரை முருகன் தெரிந்துகொண்டிருப்பார்” - விஜய பிரபாகரன்

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“விஜயகாந்தை சீண்டியதன் விளைவை துரை முருகன் தெரிந்துகொண்டிருப்பார்” - விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்
  • News18
  • Last Updated: April 6, 2019, 5:42 PM IST
  • Share this:
வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பிரசாரம் செய்தார்.

தேமுதிக கூட்டணிக்காக ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக உடன் பேசியதாக விமர்சனம் எழுந்தது. தேமுதிக நிர்வாகிகள் கூட்டணிக்காக பேசியதாக திமுக பொருளாளர் துரை முருகன் பேட்டியளித்தார்.

இதனால், கொதிப்படைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துரை முருகனை கடுமையாக விமர்சித்து பேசினார்.


சமீபத்தில் துரை முருகன் வீடு மற்றும் கல்லூரிகளில் ஐடி ரெய்டு நடந்தது. இதனால், தேமுதிக தரப்பில் சிறிய மகிழ்ச்சி நிலவுகிறது. இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்துக்கு ஆதரவாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பிரசாரம் செய்தார்.

படிக்க... பிரச்சாரத்தின்போது டைமிங்கில் அசத்திய பிரேமலதா விஜயகாந்த்!

“வேலூர் என் அம்மாவின் சொந்த மாவட்டம். அதனால், இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த் தான். தற்போது வேலூர் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறிவிட்டது. ஆட்சியிலே இல்லாவிட்டாலும் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அது யாருடையது என்று உங்களுக்கே தெரியும்.விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை என்றேன். தேவையில்லாமல் துரைமுருகன் சீண்டி பார்த்து விட்டார். அதன் விளைவை தெரிந்து கொண்டிருப்பார்.

ஸ்டாலின் சொல்கிறார் எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை என்று. இதை விஜயகாந்த் சொன்னால் பொருந்தும். உங்கள் உடல் முழுவதும் கனம் இருக்கிறது. அதனால் தான் மாட்டிக் கொண்டீர்கள்” என்று விஜய பிரபாகரன் பேசினார்.

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also See...

First published: April 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்