வரும் மே 9, 10 ஆம் தேதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மீதான மானிய கோரிக்கைகள் சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், உள்துறைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
வரும் 9, 10 ஆம் தேதிகளில் காவல், தீயணைப்பு & மீட்புப் பணிகள் மீதான மானிய கோரிக்கைகள் சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
மேலும், விசாரணைக் கைதி விக்னேஷ் லாக் அப் மரண வழக்கு தொடர்பாக ஆய்வாளர் உட்பட ஒன்பது போலீஸாரிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கைது நடவடிக்கை தொடர்பாக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.