• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விஜயபாஸ்கர் மனைவி மகளுக்கு கொரோனா தொற்று.. முகக்கவசம் அணிந்து அதிகாரிகள் சோதனை

விஜயபாஸ்கர் மனைவி மகளுக்கு கொரோனா தொற்று.. முகக்கவசம் அணிந்து அதிகாரிகள் சோதனை

விஜயபாஸ்கர் குடும்பம்

விஜயபாஸ்கர் குடும்பம்

விஜயபாஸ்கர் மனைவி ரம்யா மற்றும் அவருடைய மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

  • Share this:
    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவி மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா தொற்று இருக்கும் நிலையில் முகக்கவசம் அணிந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    முன்னாள் சுதாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்கிறது. சென்னை சேத்துபேட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரி வீட்டிலும் கோவை இராமநாதபுரத்தில் விஜயபாஸ்கர் மாமானார் சுந்தரம் இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது.

    Also Read: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது, 2013-2021 ஆண்டுகளில் வருமானத்தைவிட அதிகளவு சொத்து குவித்தாக வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தனது மனைவி பெயரில் பொருந்தாத வகையில் ரூ. 27.22 கோடிக்கு சொத்து சேர்த்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா மற்றும் அவருடைய மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் தனிமைபடுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: