ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு

காமராஜ்

காமராஜ்

vigilance Raid : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருவாரூர் மாவட்டம் மண்ணார்குடியில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 49 இடங்களில் காலை முதலே இந்த சோதனை நடந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், அப்போது அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசயா சொத்துக்களை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: ADMK, Directorate of Vigilance and Anti-Corruption, DVAC, Kamaraj