VIGILANCE POLICE ARRESTED BILL COLLECTOR FOR TAKING BRIBE IN PERAMBALUR ON THE SPOT VAI
லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை கையும் களவுமாக பிடித்து கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்...
லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் அப்பு
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் புதிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.15000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்சஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பெரம்பலூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நகராட்சி எல்லைக்குள் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவர் கட்டிய வீட்டிற்கு புதிதாக வரி நிர்ணயம் செய்வதற்காக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அங்கு பில் கலெக்டராக பணியாற்றி வரும் நகராட்சி ஊழியர் அப்பு என்கிற அப்புலோஸ் என்பவர், வரியை குறைத்து போடுவதற்கும், வரி நிர்ணயம் செய்வதற்கும், தனக்கு ரூ.15,000 லஞ்சம் தர வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளார்.
அப்புலோஸ்க்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் இது குறித்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். வெங்கடேசனின் புகாரின் பேரில் பெரம்பலூர் லஞ்சம் ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா மற்றும் ஆய்வாளர்கள் ரத்தின வள்ளி, சுலோச்சனா ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வெங்கசேசனிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.15,000ஐ அப்புலோஸ் வாங்கிய போது, மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்தனர்.