முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சரை விசாரிக்க அவசியம் இல்லை: லஞ்ச ஒழிப்புத் துறை

நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சரை விசாரிக்க அவசியம் இல்லை: லஞ்ச ஒழிப்புத் துறை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை துறை டெண்டர்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார் குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரிடம் விசாரணை நடத்துவதற்கான அவசியம் இல்லை என தெரிவித்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை நியமிப்பது யார் என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு இயக்குநரை நியமிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

First published:

Tags: CM Palanisamy, Edappadi palanisamy, Highways tender