திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, திருச்சி மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் தங்களது பல்வேறு தொழில்களுக்கு தேவையான கடன்களை வங்கியிலிருந்து பெற்றுத் தருவதற்காக திட்ட அறிக்கை தயார் செய்து வழங்கப்படுகிறது.
இதன் மூலம், அவர்கள் எளிதாக வங்கிகளில் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மாவட்ட தொழில் மையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கணக்கில் வராத மூன்று லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் குறித்து விசாரணை நடத்தியபோது, திருச்சி மாவட்ட மேலாளர் ரவீந்திரகுமார், உதவி மேலாளர் கம்பன் ஆகியோர் உரிய பதில் அளிக்கவில்லை.
அதையடுத்து, அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். மேலும், மாவட்ட மேலாளர் ரவீந்திரகுமார் உறையூர் மற்றும் காட்டூர் வீடுகள் மற்றும் உதவி மேலாளர் கம்பன் வீடுகளில் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
Must Read : நெல்லை கல்குவாரி விபத்து.. பாறை இடுக்குகளில் இருந்து லாரி கிளீனர் முருகன் சடலமாக மீட்பு.. தொடரும் சோகம்
இதில், உறையூரில் உள்ள ரவீந்திர குமார் வீட்டில் நடந்த சோதனையில், 6 லட்சம் ரொக்கம், 50 சவரன் நகைகள், ஒரு கோடி மதிப்புள்ள நில ஆவணங்கள், வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட, 40 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DVAC, Trichy, Vigilance officers