Home /News /tamil-nadu /

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தங்கமணி

தங்கமணி

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தற்போதுவரை கோவை, நமக்கல், ஈரோடி, சேலம், சென்னை என 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகாவிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னயில் மட்டும் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல, நாமக்கல் மாவட்டம் கோவிந்தம் பாளையத்தில் உள்ள, தங்கமணி வீட்டில் காலை 6:45 மணி முதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில், பாரி வீதி , பண்ணை நகர், பண்ணை வீதி, கணபநி நகர், முனியப்பன் கோவில் வீதி உள்ளிட்ட 5 இடங்களில் 30 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கரூர் அருகே வேலாயுதம்பாளையம் பகுதியில், அதிமுக முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியின் உறவினர் வசந்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றது வருகிறது.

    Must Read : இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

    இதேபோல, சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள, தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Directorate of Vigilance and Anti-Corruption

    அடுத்த செய்தி