தமிழகத்தில் ஆண்டுதோறும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுவருகிறது. ஜெயலலிதா முதல்வராக 2011-ம் ஆண்டு பதவியேற்றபிறகு 2012-ம் ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு லேப்டால் வழங்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘2017-18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணினி கிடைக்கவில்லை. அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் இந்த ஒரு கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி கிடைக்காமல் உள்ளது.
அந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். அவர்களின் விவரங்களை சேகரிக்கும் ஆறு மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனுப்பிய பிறகும் கூட மடிக்கணினிகள் இன்னும் மாணவர்களை வந்தடையவில்லை. உடனே இந்த மடி கணினிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்திகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்