சாலையில் தாறுமாறாக ஓடிய கார் : மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்ட விசிக வழக்கறிஞர்

தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர்

முகக்கவசம் அணியாமல் இருந்ததுடன், மது போதையில் காவலர்களிடம் தகராறு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

 • Share this:
  வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போலீசாருடன், மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரையும் பறிமுதல் செய்தனர்.

  சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடியில் ஒரு கார் தாறுமாறாக வந்துள்ளது. அப்பொழுது போலீசார் காரை மறித்து சோதனை செய்த பொழுது போது (TN04Q6800) காரில் வந்த நபர் அருகில் இருந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் சென்று வாகனத்தை நிறுத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரிடம் விசாரித்த போது, தான் வழக்கறிஞர் என்று சொல்லி முகக்கவசம் அணியாமல் இருந்ததுடன், மது போதையில் காவலர்களிடம் தகராறில் ஈடுபாட்டுள்ளார்.

  சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமசந்திரன் மது போதையில் தகராறு செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தகராறில் ஈடுபட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந் விஸ்வநாதன் என்பது தெரியவந்துள்ளது.

  Must Read : குடிபோதையில் மகளிடம் அத்துமீற முயன்ற தந்தை - அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகள்

  இந்நிலையில், அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Suresh V
  First published: