• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு: தொல். திருமாவளவன் வெளியிட்டார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு: தொல். திருமாவளவன் வெளியிட்டார்

விசிக தேர்தல் அறிக்கை

விசிக தேர்தல் அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விழுப்புரத்தில் வெளியிட்டார் அதில், பாஜகவை சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவோம் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து போராடுவோம் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

 • Share this:
  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விழுப்புரத்தில் வெளியிட்டார். அதில், பாஜகவை சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவோம் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து போராடுவோம் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

  விசிக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  தலித்துகள் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக் கட்டும் தீய நோக்கோடு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் தனியார் மயப்படுத்தல் போன்ற அனைத்து வகையான சதி முயற்சிகளை முறியடித்து சமூகநீதியை பாதுகாப்போம்.

  அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவை சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவோம் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து போராடுவோம்.

  மொழிவழித் தேசியம் மாநில உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை பாதுகாத்து அரசியலமைப்புச் சட்டம் முன்மொழியும் கூட்டாட்சி முறையை பாதுகாப்போம்.

  பெண்களுக்கு சட்டமியற்றும் அவைகளில் 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்க வழிவகை செய்யப்படும்.

  ஒரே தேசம் ஒரே கல்வி என்ற தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம். கல்வியை மாநிலப் பட்டியலில் இடம் பெறச் செய்யப்படும்.

  ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தடுத்து, வாழ்வாதாரங்களையும் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.

  கல்வி மருத்துவம் சுகாதாரம் ஆகிய கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும்.

  மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தொடர்ந்து போராடுவோம் மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வளர்த்தெடுக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

  ஐநா மன்றத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கான சிக்கலைத் தீர்க்க தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம். என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

  தேர்தல் அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “சமூகநீதி மண்ணாக உள்ள தமிழகத்தில் சாதி, மதத்தின் பெயரால் ஆதாயம் தேட முயலும் பாஜகவின் திட்டத்தை அம்பப்படுத்துவோம். பாஜக வெறும் அரசியல் கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோட்பாடுகளை ஏற்று நடக்கும் அமைப்புதான் பாஜக.

  ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு சனாதன அமைப்பு. வெறுப்பு அரசியலை மூலதனமாக கொண்டு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதே அதனுடைய திட்டமாக உள்ளது. அதன் அரசியல் பிரிவாக பாஜக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் இஸ்லாமியர்கள், கிருத்துவர்களை தனிமைப்படுத்தும் நோக்கோடு செயல்படுகிறது.

  மக்கள் சாதி உணர்வுடன் இருக்க வேண்டும் என பாஜக என்னுகிறது. வட மாநிலங்களில் எந்நேரமும் சமூக பதற்றம் நிலவிக்கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படியான பதற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு கலைஞர், ஜெயலலிதாதான் காரணம். இன்றைக்கு இருவரும் இல்லை என்ற இலையில் அதிமுக முதுகில் ஏரி பாஜக சவாரி செய்கிறது. அதனால்தான் விசிக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ளது. அதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி எங்கள் கூட்டணி.

  Must Read : சசிகலா மீது நன்மதிப்பு உள்ளது... அதிமுகவில் இணைப்பது குறித்து பரிசீலிப்போம் : ஓபிஎஸ் கருத்து

   

  பாஜகவின் பினாமி கட்சியாக அதிமுக உள்ளது. பாஜகவை விரட்டி அடிக்க வேண்டும். அதன் மூலமே சமத்துவத்தை நிலைநாட்ட முடியும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுக்காக்க முடியும்.” என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: