ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செல்போனில் வீடியோ பதிவு.. ஆளுநரின் விருந்தினர் மீது புகார் கிளப்பிய டி.ஆர்.பி ராஜா

செல்போனில் வீடியோ பதிவு.. ஆளுநரின் விருந்தினர் மீது புகார் கிளப்பிய டி.ஆர்.பி ராஜா

மாதிரி படம்

மாதிரி படம்

ஆளுநரோடு சட்டமன்றத்திற்கு வந்த விருந்தினர் ஒருவர் அவை நடவடிக்கையை வீடியோ எடுத்ததாக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா புகார் எழுப்ப, இந்த விவகாரம் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் உரையாற்றியபோது நடந்த சம்பவம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அசாதாரண சூழல் ஆளுநரால்தான் ஏற்பட்டதாகவும், அரசால் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், ஆளுநர் என்பவர் நியமனம் செய்யப்பட்டவர், உரையை வாசிப்பது மட்டுமே அவரது கடமை என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து அவை உரிமை மீறல் பிரச்னையை எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, “ஆளுநரோடு வந்த விருந்தினர் ஒருவர் பேரவை நடவடிக்கைகளை செல்போன் வாயிலாக பதிவு செய்து கொண்டிருந்தார். இதை அவைக் காவலர் ராஜனிடம் கூறி நடவடிக்கை எடுக்க கூறியிருந்தேன். பேரவை விதிகளின் படி இது தவறானதாகும். இதனை அவை உரிமை மீறல் குழுவினருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "இந்த பிரச்னையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுகிறேன். இதை ஆய்வு செய்து  அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை மீறல் குழுவிற்கு உத்தரவிடப்படுகிறது" என்று தெரிவித்தார்.

First published:

Tags: RN Ravi, TN Assembly