Home /News /tamil-nadu /

புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் தமிழ்நாடு குறித்த காணொளி.. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் தமிழ்நாடு குறித்த காணொளி.. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அந்த அழகிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காணொளியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். இந்திய அரங்கை பார்வையிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார்.

    அப்போது பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அரங்கு அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

    இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ்வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப்பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் தொடர்ச்சியாக காட்சிப் படங்கள் திரையிடப்படுகின்றன.

    இதையும் படிங்க - நிதி மசோதா நிறைவேற்றம்: கிரிப்டோகரன்சிக்கு வரி விதிக்கும் நடைமுறை ஏப்.1 முதல் அமல்!

    அந்த அரங்கின் முகப்பில் ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற இலச்சினை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அரங்கை திறந்து வைத்த பிறகு கண்காட்சியில் தமிழ்நாடு வாரக் கொண்டாட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து, துபாயில் உள்ள இரண்டாயிரத்து 217 அடி உயரம் கொண்ட உலகின் அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது தமிழ்நாடு குறித்த காட்சிப்படம் ஒளிபரப்பப்பட்டது. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அந்த அழகிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, 3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி மற்றும் பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பப்பட்டது.

    இதனை, குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Dubai, MK Stalin

    அடுத்த செய்தி