Home /News /tamil-nadu /

என் அம்மாவை பொட்டலம்போல கட்டிக் கொடுத்தார்கள்- ராஜீவ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் மகன் ஆதங்கம்

என் அம்மாவை பொட்டலம்போல கட்டிக் கொடுத்தார்கள்- ராஜீவ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் மகன் ஆதங்கம்

பேரறிவாளன்

பேரறிவாளன்

பேரறிவாளன் விடுதலை என்பது மத்திய, மாநில அரசின் தவறான முடிவு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குண்டு வெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் மகன் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேரறிவாளனை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனையடுத்து, பேரறிவாளன் விடுதலைத் தீர்ப்பை தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் வெடிவெடித்து கொண்டாடினர்.

    இந்தநிலையில், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி சம்தானிபேகம் என்பவர் மகன் அப்பாஸ் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ‘குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடந்த 33 ஆண்டுகளாக சின்னா பின்னமாகி படிப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி வாழ்ந்து வருகிறார்கள். இந்த தீர்ப்பு 16 குடும்பங்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தீர்ப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக ஒன்னும் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. ஒரு பாரதப் பிரதமர் மற்றும் 16 குடும்பத்தை சேர்ந்தவர்களை கொன்றுவிட்டு உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை பெற்று இன்று அதே உச்ச நீதிமன்றத்தால் தண்டனையிலிருந்து வெளியாகி இருக்கிறார்கள்.

    இன்று உள்ள அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இவர் வெளியே வந்திருக்கலாம். ஆனால் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். இந்த 16 குடும்பத்தின் வலியும் வேதனையும் இருக்கிறது. ஆண்டவன் தீர்ப்பு ஒருநாள் கிடைக்கும். அதிலிருந்து அவர்களால் வெளிவர முடியாது. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று விரைவில் முடிவு எடுப்போம். பேரறிவாளன் விடுதலை என்பது மத்திய, மாநில அரசின் தவறான முடிவு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பாரத பிரதமரையே கொன்று இருக்கிறார்கள். அதை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் தமிழர்கள் என்பதால் வெளியே விடலாமா? யார் வேண்டுமென்றாலும் என்ன வேணாலும் செய்யலாம்.

    அரசியல் லாபத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாட்டின் மீது பற்று உள்ளவர்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள். மத்திய, மாநில அரசு எப்படி இந்த முடிவெடுத்து இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு அமைச்சரவை மட்டுமே எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே பிரச்சனை அவர்கள் வீட்டில் நடந்திருந்தால் இந்த முடிவு எடுத்து இருப்பார்களா?

    பேரறிவாளனிடமும், அற்புதம்அம்மாளிடம் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

    நாங்கள் சாமானியர்கள் என்பதால் எங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் எதிர்த்துப் போராட முடியாது என்ற காரணத்துக்காக இதுபோன்று செய்திருக்கிறார்கள்.
    இன்று காலை முதல் தொலைக்காட்சிகளில் பட்டாசு வெடிக்கிறார்கள். ஆனால் விடுதலைப் போராட்டத்திற்காக கஷ்டப்பட்டு வெளியே வந்தவர்கள் கிடையாது. ஒருநாள் சிறையில் இருந்து பாருங்கள் என்று அற்புதம்அம்மாள் கூறுகிறார்கள். அது மிகக் கடினமான ஒரு விஷயம் தான்.

    ஆனால் 31 ஆண்டுகள் தாய், தந்தையை பிரிந்து கஷ்டப்பட்டு  வாழ்ந்து கொண்டிருக்கிறோமே. என் அம்மாவை பொட்டலம் போல் கட்டி கொடுத்தார்கள். நாங்கள் எதைத்தான் எங்களுடைய வாழ்க்கையில் கண்டோம். படிப்பு, வாழ்க்கை எல்லாம் போய்விட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதலமைச்சரிடம் ஒரே கோரிக்கை வைத்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இந்த 16 குடும்பத்தை காப்பாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. மிகப்பெரிய கோரிக்கையாக. வைக்கின்றேன். 33 வருடங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். இதன் பிறகாவது ஒரு நல்ல வாழ்க்கை எங்களுக்கு வேண்டும். சந்தோஷம் வேண்டும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் ஏதாவது செய்வீர்களா என எதிர்பார்த்து நம்பி கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

    செய்தியாளர்: கண்ணியப்பன், அம்பத்தூர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Perarivalan

    அடுத்த செய்தி