Home /News /tamil-nadu /

தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக விச்சு லெனின் பிரசாத் நியமனம்.

தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக விச்சு லெனின் பிரசாத் நியமனம்.

விச்சு லெனின் பிரசாத்

விச்சு லெனின் பிரசாத்

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக  திருச்சியை சேர்ந்த விச்சு லெனின் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இளைஞர் காங்கிரஸ்-க்கு தலைவர் உட்பட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ஆன்லைன் வாயிலாக தேர்தல் நடத்தப்பட்டது. மொபைல் செயலி மூலம் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

    இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருச்சியை சேர்ந்த விச்சு லெனின் பிரசாத் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தார். ஜோஸ்வா, நவீன் ஆகியோ அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். இந்த மூவரையும் தலைமை டெல்லிக்கு அழைத்தது. டெல்லியில் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது.

    Also Read: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள்  திடீர் ஆலோசனை

    நேர்காணல் அடிப்படையிலும் கட்சியில் கடந்த காலங்களில் இவர்களின் செயல்பாடுகளை வைத்தும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து மாநில தலைவராக விச்சு லெனின் பிரசாத் நியமிக்கப்பட்டார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Congress, Tamilnadu, Trichy

    அடுத்த செய்தி